சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.640 குறைந்து ரூ.74,340 விற்பனை செய்யப்படுகிறது..
2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் ரூ.2000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது.. எனினும் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்தது..
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.80 குறைந்து, ரூ.9,295க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.74,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. குறிப்பாக 2 நாட்களில் தங்கம் விலை, ரூ.1200 குறைந்துள்ளது..
அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : EPFO: UAN எண் இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்..! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க..!