அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள கலிஸ்பெல் நகர விமான நிலையத்தை நெருங்கும் போது ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.. ஓடுபாதையில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.. விபத்து நடந்த இடத்தில் விண்ணை முட்டும் அளவு கரும்புகை சூழ்ந்ததது.. விரைவிலேயே இந்த ட்தார் சாலை முழுவதும் மற்றும் அருகிலுள்ள புல்வெளிப் பகுதிக்கு தீ பரவியது.. இருப்பினும், அவசரகால மீட்புப் பணியாளர்களால் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளூர் போலீசார் பின்னர் உறுதிப்படுத்தினர்.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தில், விமானி மற்றும் 3 பயணிகள் உட்பட 4 பேர் விமானத்தில் இருந்தனர்.. ஆனால் அதிர்ஷ்டவசமாக, 4 பேருக்கும் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.. விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானம் Socata TBM 700 டர்போபிராப் என FAA ஆல் அடையாளம் காணப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த விமானம் மீட்டர் ஸ்கை எல்எல்சிக்கு சொந்தமானது என்று FAA பதிவுகள் காட்டுகின்றன.
விமானி கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதியதாகவும், பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பல விமானங்கள் மீது விமானம் விழுந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. பல விமானங்களில் தீப்பிடித்ததாகவும் காலிஸ்பெல் போலீசார் தெரிவித்தனர்.
பிரதிநிதி ரியான் ஜின்கே, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். “கலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் எனது ஊழியர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். எங்களுக்குப் புரிந்த வரை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கடவுளுக்கு நன்றி. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை அவர்கள் கையாளும் போது, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான நிலையத்திற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்,” என்று அவர் கூறினார்.
அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்வதால், சம்பந்தப்பட்ட விமான வகைகள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விசாரணையை தொடங்க உள்ளது..
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, அவசரகால பணியாளர்கள் அந்த இடத்தைப் பாதுகாத்து மீதமுள்ள ஏதேனும் அபாயங்களை மதிப்பிடும் வரை, கலிஸ்பெல் நகர விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Read More : சென்னை வந்த விமானத்தில் திடீர் தீ விபத்து.. பரபரப்பான விமான நிலையம்..!! என்ன நடந்தது..?