2002ஆம் ஆண்டு ஈஷ்வர் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகனார் அறிமுகமானார் நடிகர் பிரபாஸ்.. தொடர்ந்து, வர்ஷம், மிர்ச்சி, டார்லிங் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் பிரபல நடிகராக மாறினார்.. எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1, 2 படங்களின் மூலம். உலகளாவிய புகழை பிரபாஸ் பெற்றார்.. அவர் “Rebel Star” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் பிரபாஸ் உள்ளார்.., சமீபத்தில் சலார் உள்ளிட்ட பான்-இந்தியா படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 45 வயதாகும் நடிகர் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார்.. அவ்வப்போது அவர் திருமணம் குறித்து சில வதந்திகள் பரவுகின்றனர்.. குறிப்பாக நடிகை அனுஷ்காவும் பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பேசப்பட்டது.. ஆனால் அது வெறும் வதந்தி என்பது பின்னர் தெரியவந்தது..
இந்த நிலையில் நடிகர் பிரபாஸின் அத்தை சியாமளா தேவி பிரபாஸ் திருமணம் குறித்து பேசியுள்ளார்.. பத்திரிகையாளர்களிடம் பேசிய சியாமளா தேவி, சிவபெருமானின் ஆசியுடன், பிரபாஸ் இறுதியில் திருமணம் செய்து கொள்வார் என்று தெரிவித்தார். தெய்வீக அருள் விரைவில் இந்த நிகழ்வை சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கையில், குடும்பத்தினர் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேசிய அவர் “சிவபெருமானின் ஆசிகள் கிடைத்தவுடன், பிரபாஸ் திருமணம் செய்து கொள்வார். “நாங்கள் அனைவரும் அவரது திருமணத்திற்காக முயற்சி செய்து வருகிறோம், மேலும் சிவபெருமானின் அருளால் அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.
அவரின் வெளிப்படையான கருத்துக்கள் ரசிகர்களிடையே ஒரு புதிய உற்சாகத்தைத் தூண்டியுள்ளன.. பிரபாஸ் இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வெளியிடுவாரா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..
கடைசியாக கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ் லீட் ரோலில் நடித்திருந்தார்.. பிரபாஸின் அடுத்த படமான தி ராஜா சாப் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.. ரொமாண்டிக் ஹாரர் படமாக உருவாகும் இந்த திட்டத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்கி உள்ளார்.
சலார் 2; ஸ்பிரிட் ஆகிய படங்கள் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார்.. இந்த படம் 2027-ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..