ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025 ஆம் ஆண்டிற்கான கிளார்க் (ஜூனியர் அசோசியேட் – வாடிக்கையாளர் உதவி மற்றும் விற்பனை) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 6589 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையில் பட்டப்படிப்பு (31.12.2025-க்குள் முடித்திருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்கள், முடிவுகள் வெளியாகி பட்டப்படிப்பு முடித்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 28 வயது (01.04.2025 அன்று). வயது தளர்வு: எஸ்சி/எஸ்டி: 5 ஆண்டுகள் ஓபிசி: 3 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகள்: 10-15 ஆண்டுகள் (பிரிவைப் பொறுத்து)
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் தோராயமாக ரூ.46,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் மொழித் திறன் தேர்வு (LPT) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ஐ பார்வையிடவும்.
- “Careers” பிரிவில் சென்று “SBI Clerk Notification 2025” என்பதை கிளிக் செய்யவும்.
- “Apply Online” இணைப்பை தேர்ந்தெடுக்கவும்.
- அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பெறவும்.
- பதிவு எண் மற்றும் கடவுச்சொல் மூலம் மீண்டும் உள்நுழையவும்.
- மீதமுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும். பிரிவு வாரியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
- “Submit” பொத்தானை கிளிக் செய்து, விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 26, 2025 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Read more: மார்பகப் புற்றுநோய்: வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி..? – மருத்துவர்கள் விளக்கம்