முருகப்பெருமானிடம் இப்படி வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும்..!! இந்த கிழமையை மட்டும் மறந்துறாதீங்க..!!

Murugan 2025

தமிழ் கடவுளான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் மனதார வழிபாடு செய்தால், நாம் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், முருகப்பெருமானின் முழு அருளும் கிடைக்க ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


முருகப்பெருமானிடம் பலரும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவார்கள். அது நிறைவேறிவிட்டால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள். ஆனால், சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் இருக்கும். அவர்கள், அந்த வேண்டுதலுக்குரிய கிரகத்தை அறிந்து அந்த நாளில் முருகப்பெருமானை வழிபட்டால், உங்களுக்கும் அதன் பலன்கள் கிடைக்கும்.

இந்த வழிபாட்டை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். நீங்கள் காலையில் எழுந்ததும், குளித்துவிட்டு பூஜை அறையில் தீபாம் ஏற்றி வழிபாடு செய்யலாம். அதேபோல், மாலை நேரத்திலும் உங்களுக்கான நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக, முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். மேலும், மஞ்சள் நிற பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு அகல் விளக்கில், நெய் ஊற்றி தீபம் ஏற்றி உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் கூற வேண்டும்.

பிறகு கந்த சஷ்டி கவசம் போன்ற முருகப்பெருமானின் பாடல்களை பாடி உங்களின் வேண்டுதல்களை வைத்து தீப தூப ஆராதனை செய்து வழிபடலாம். இவ்வாறு தொடர்ந்து 6 வியாழக்கிழமை செய்து வந்தால், குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.

அதேபோல், தந்தைக்கு குருவாக இருந்து பாடம் கற்பித்த சுப்பிரமணியனை வாரத்தில் வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்யலாம். இப்படி செய்வதால், முருகப்பெருமானுடைய அருளும் குரு பகவானுடைய அருளும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

Read More : வருடம் முழுவதும் சுமங்கலி கோலத்தில் காட்சி தரும் அம்மன்..!! பெண்கள் இப்படி வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்..!!

CHELLA

Next Post

மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு... அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்த திட்டம்...!

Thu Aug 14 , 2025
திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
Marxist 2025

You May Like