IOB வங்கியில் வேலை.. இளம் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு.. தமிழ் நல்லா தெரிந்தால் போதும்..!!

bank job

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி பெற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தேசிய அளவில் பல மாநிலங்களில் மொத்தம் 750 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கிறது.


பணியிட விவரம்: தேசிய அளவில் மொத்தம் 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 200 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவை எஸ்சி பிரிவில் – 58, எஸ்டி பிரிவில் – 3, ஒபிசி பிரிவில் – 86, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 10, பொதுப் பிரிவு – 43 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்கள் வழங்கப்பட்டது.

வயது வரம்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு 01.08.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 20 வயதை நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். இதில் மத்திய அரசின் விதிமுறைகளின்படி, சமூக வாரியாக தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

* தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதார்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் 01.04.2021 முதல் 01.08.2025 வரை தேதியின் பெற்றிருக்க வேண்டும்.

* விண்ணப்பதார்களுக்கு உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உதாராணத்திற்கு, தமிழ்நாட்டில் பயிற்சி பெற தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: வங்கியில் தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மெட்ரோ நகரங்களுக்கு மாதம் ரூ.15,000, நகர பகுதிகளுக்கு மாதம் ரூ.12,000 மற்றும் புறநகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு:

  • 100 மதிப்பெண்களுக்கு, 100 கேள்விகள்.

உள்ளூர் மொழித் தேர்வு:

  • எழுத, படிக்க, பேச, புரிந்துகொள்ளும் திறன் அவசியம்.
  • 10ஆம் / 12ஆம் வகுப்பில் அந்த மொழி பாடமாக இருந்தால் விலக்கு.

நேர்முகத் தேர்வு:

  • சான்றிதழ் சரிபார்ப்பு

இறுதி தேர்வு:

  • மூன்று கட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே சேர்க்கை.

விண்ணப்பிக்கும் முறை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழிற்பயிற்சி இடங்களுக்கு https://bfsissc.com/ என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது https://www.iob.in/Careers என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதார்கள் இதற்கு முன்பே https://nats.education.gov.in/ அல்லது https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025

Read more: எலும்புகளை வலுப்படுத்த என்ன சாப்பிட வேண்டும்?. இந்த 3 உணவுகள் போதும்!.

English Summary

Job at IOB Bank.. Golden opportunity for young graduates.. Just know Tamil well..!!

Next Post

உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா..? தினமும் இந்த பழக்கங்களை கடைபிடியுங்க..!

Thu Aug 14 , 2025
Want to lose weight easily? Follow these habits every day!
loss weight 1

You May Like