பீகாரில் இரண்டு மைனர் சிறுமிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டு கணவன் – மனைவி போல் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அக்பர்பூர் தொகுதி பகுதியைச் சேர்ந்த 3 சிறுமிகளும் நெருங்கிய தோழிகள். இவர்கள் மூவரும் ஜூலை 19ஆம் தேதியன்று தங்கள் குடும்பத்தினரிடம் மார்க் ஷீட் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் மூவரும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு தப்பிச் சென்று அங்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, அந்த 3 பேரில் இருவர் ஆர்த்தி மற்றும் ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டனர். மேலும், 3-வது சிறுமி கோமதி அவர்களுடனே தங்கினார்.
இதற்கிடையே, மார்க் ஷீட் வாங்கச் சென்ற தங்களது மகள்களை காணவில்லை என அவரது பெற்றோர்கள், காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். பின்னர், அவர்கள் இருக்குமிடம் தெரிந்து அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோதி மீது தனக்கு ஆரம்பத்தில் இருந்தே காதல் இருந்ததாகவும், அவளுடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்ததாகவும் ஆர்த்தி போலீசாரிடம் கூறினார். மேலும், தங்கள் குடும்பத்தினர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : LCU-வில் இணைந்த “கூலி” திரைப்படம்..? கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்..!!