ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை நாடு தனது 79 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இன்று நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது.. ஆனால் இந்தியாவில் 2 மாவட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை.. அதற்கு பதில் 2 நாட்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
காரணம் என்ன?
இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆனால் இந்த சுதந்திரம் முழு இந்தியாவிற்கும் ஒரே மாதிரியாக கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. இவற்றில் மால்டா மற்றும் நாடியா ஆகியவை அடங்கும். அந்த நேரத்தில் இந்தப் பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆகஸ்ட் 15 அன்று இங்கு சுதந்திரம் கொண்டாடப்படவில்லை. இந்தப் பகுதிகளை முழுமையாக இந்தியாவில் சேர்க்க 3 நாட்கள் ஆனது.. அதன் பிறகு ஆகஸ்ட் 18 அன்று மவுண்ட்பேட்டன் பிரிவினை வரைபடத்தை திருத்தம் செய்தார். அதன் பிறகு, இங்குள்ள மக்கள் ஆகஸ்ட் 18 அன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கொண்டாட்டங்களுக்குப் பதிலாக, மால்டா, நாடியா உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் தொடங்கின.
வரைபடத்தில் மேம்பாடுகள்
இந்த நிலைமையை சரிசெய்ய, அந்த நேரத்தில் ஒரு முக்கிய தலைவராக இருந்த பண்டிட் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும், நாடியாவின் அரச குடும்பம் போன்ற செல்வாக்கு மிக்கவர்களும் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். இந்தப் பகுதிகள் இந்தியாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தப் பிரச்சனை அப்போதைய வைஸ்ராய் லார்ட் மவுண்ட்பேட்டனை அடைந்தது, அவர் பிரிவினை வரைபடத்தில் திருத்தம் செய்ய உத்தரவிட்டார். 1947 ஆகஸ்ட் 17 அன்று இரவு, இந்தத் திருத்தம் நிறைவடைந்து, இந்தப் பகுதிகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக, நாடியா மற்றும் மால்டாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் என்ன ?
1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றதைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறும்.. நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் நாளாகவும் இந்த நாள் உள்ளது.. நாடு முழுவதும், மாநில தலைநகரங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கலாச்சார நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் மற்றும் தேசபக்தி பாடல்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.. இந்த நாள் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளை ஏற்றுக்கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது.
Read More : சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை முதன்முதலில் அங்கீகரித்த நாடு எது?. ஆச்சரியமான தகவல்!