இந்தியாவுடன் இணைந்து இன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள் எவை தெரியுமா?.

countries celebrate independence day 11zon

இந்தியாவில் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை செங்கோட்டையில் பிரதமர் ஏற்றுவார். அதனைத்தொடர்ந்து, நாட்டில் வலிமை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் கொண்டாட்டங்கள் இருக்கும். இதே நாளில் உலகில் வேறு சில நாடுகளும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த நாளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் தேசியக் கொடி ஏற்றப்பட்ட மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும், நாட்டில் வலிமை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. இதே போன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் 5 நாடுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தென் கொரியா மற்றும் வட கொரியா :சுமார் 35 ஆண்டுகள் ஐப்பானியர்களின் காலனி ஆதிக்கத்தில் அடிமைகளாக இருந்த கொரியாவிற்கு 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. தென் கொரியா மற்றும் வட கொரியா என்று தனித்தனி நாடாக பிரிந்த நிலையில், தென் கொரியாவில்’Gwangbokjeol’ என்றும் வட கொரியாவில் ‘Chogukhaebangui nal’ என்றும் கொண்டாடப்படுகிறது.

லிச்சென்ஸ்டீன் (Liechtenstein): ஐரோப்பியாவில் அமைந்துள்ள லிச்சென்ஸ்டீன் என்பது ஒரு சிறிய நாடாகும். இருப்பினும் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நாடு 1866ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. 1940ஆம் ஆண்டில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினமாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனநாயக குடியரசு நாடான காங்கோ : மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜனநாயக குடியரசு நாடான காங்கோ பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்தது. 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி காங்கோவிற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாள் காங்கோவின் தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பஹ்ரைன் (Bahrain) :பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு பஹ்ரைன் ஆகும். பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்த தீவு நாட்டிற்கு 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை கிடைத்தது. ஆனால் இங்கு டிசம்பர் 16ஆம் தேதி தான் தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Readmore: சுதந்திரம் அடைந்தபோது ஒரு ரூபாயில் என்ன வாங்க முடியும்?. தங்கம், ரேஷன் பொருட்கள் விலை என்ன தெரியுமா?.

KOKILA

Next Post

School: அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்...! பள்ளி கல்வித்துறை உத்தரவு...!

Fri Aug 15 , 2025
அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம் செய்வது தொடர்பாக வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் […]
tn school 2025

You May Like