வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ”கூலி” படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”கூலி”. இப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 50ஆம் ஆண்டுகள் ஆகிறது. இதனால், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. கூலி திரைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இன்று சுதந்திர தின விடுமுறை அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், கூலி படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வட அமெரிக்காவில் வெளியான ‘கூலி’ திரைப்படம், அதன் பிரீமியருக்கு முன்பே சாதனைப் படைத்துள்ளது. பிரீமியர் ஷோவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை கூலி திரைப்படம் படைத்துள்ளது. பிரீமியர் ஷோவில் $3.4 மில்லியனை தாண்டி வசூலித்துள்ளது. அதாவது ரூ.26 கோடியாகும். ‘கூலி’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களுக்கான அதிக வசூலில் சாதனைப் படைத்துள்ள நிலையில், ‘கபாலி’ மற்றும் ‘லியோ’ படத்தின் தொடக்க சாதனைகளை முறியடித்துள்ளது.
Read More : குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால் முழு அருளும் கிடைக்கும்..? முன்னோர்கள் சொன்னது என்ன..?