fbpx

”ரூ.29.50 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்”..!! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது பண மோசடி புகார்..!!

இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அளித்த முன்பணம் ரூ.29.50 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக மருத்துவர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆசிக்கான் 2018 என்ற மருத்துவ தொடர்பான அமைப்பின் அலுவலகம் (அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு) சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேசிய மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் விநாயக் செந்தில் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 2018 டிசம்பர் மாதம் 26 மற்றும் 30ஆம் தேதிகளில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான தேசிய மாநாடு நடந்து திட்டமிடப்பட்டது. இந்த மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்காக முன்பணமாக ரூ.29.50 லட்சம் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாநாடு நடத்துவதற்கான இடம் மற்றும் தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாநாடு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்த 29.50 லட்சத்தை திருப்பி தருமாறு அவருக்கு முறையாக கடிதம் அனுப்பினேன். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டு முன் தேதியிட்ட காசோலை வழங்கினார். அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.

இதுகுறித்து பலமுறை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் வேலவனிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி அளித்தது போல் 29.50 லட்சத்தை திருப்பி தரவில்லை. ஆகவே, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

ரஜினிக்கு மட்டும் ஒரு நியாயமா..?நடிகர் விஜய்க்காக பொங்கிய சீமான்!

Wed Sep 27 , 2023
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திடீரென ரத்தான நிலையில், ரஜினிக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய்க்கு ஒரு நியாயமா என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் […]

You May Like