“கதை எழுத துப்பு இல்ல”..!! இது உனக்கு பான் இந்தியா படமா..? கூலியை வெச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

Blue Sattai Maaran 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “நண்பனை கொலை செய்தவனை பழிவாங்குவது தான் ஹீரோ வருவது தான் இப்படத்தின் கதை. பான் இந்தியா படம் என்றால் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஹிட்டாக வேண்டும். ஆனால், ரஜினி மற்ற மொழி நடிகர்களை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்துவிட்டு, பான் இந்தியா படம் என்கிறார்.

கிராமத்தில், ‘கறி வாங்க காசு இல்லாதவனே கருவாட்டை கண்டுபிடித்திருப்பான்’ என்று சொல்வார்கள். அதேபோல, கதை எழுத துப்பு இல்லாத ஒருவர்தான் இந்த படத்தின் கதையை எழுதியிருப்பார். லோகேஷுக்கு கொலை, கஞ்சா, பவுடர் கடத்துவதை தவிர வேறு எதுவும் தெரியாது போல. நாகார்ஜுனாவை ஸ்டைலிஷ் வில்லனாக காட்டியுள்ளனர். அவருக்கு கீழே சௌபின் சாஹிரை காட்டுகின்றனர்.

ரஜினி நடத்தும் மேன்ஷனில் எதுக்கு சிலர் உள்ளேயே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உபேந்திரா எவ்வளவு பெரிய டெக்னீஷியன். அவரை இந்த படத்தில் நாசம் செய்திருக்கிறார்கள். கடைசியில் அமீர் கான் வருகிறார். அவர் வந்து பீடியின் சுவைகளை பற்றி தான் பேசுகிறார். கூலி படத்தால் தற்போது ஜெயிலர் படம் நல்ல படமாகிவிட்டது. இந்தப் படம் மொக்கை படம் என்று நினைத்து பார்த்தாலும் இந்தப் படம் உங்களுக்கு பிடிக்காது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More : கபாலி, லியோ படத்தின் சாதனையை முறியடித்த கூலி..!! வட அமெரிக்காவில் புதிய சரித்திரம் எழுதிய ரஜினி..!!

CHELLA

Next Post

1947-இல் இந்தியாவிற்கு கிடைத்தது முழுமையான சுதந்திரம் அல்ல; டொமினியன் அந்தஸ்துதான்!. அப்படியென்றால் என்ன?

Fri Aug 15 , 2025
இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்ற நாள் என அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த நாளில் முழுமையான சுதந்திரம் அல்லது பூர்ண சுவராஜ் (Poorna Swaraj) கிடைத்ததா என்ற கேள்விக்கு பதில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பூர்ண சுவராஜ் என்றால் என்ன? பூர்ண சுவராஜ் என்பது 1929 ஆம் ஆண்டு லாஹோர் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசால் எடுத்த முடிவாகும். இதன்படி, இந்திய மக்களுக்கு முழுமையான […]
Dominion status 11zon

You May Like