ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் சிசாய் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு சாஹு. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் இருக்கிறார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், பெரிய இடி ஒன்று குடும்பத்தில் இறங்கியது.
அதாவது, பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் குமார். இவர், ஓட்டுநராக வேலைபார்த்து வரும் நிலையில், ரிங்கு சாஹுவின் மனைவி ஊர்மிளாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது, செல்போனில் பேசுவது, ரகசியமாக வெளியே சென்று உல்லாசமாக இருப்பது போன்ற பல திருட்டு வேலைகளை பார்த்து வந்துள்ளனர்.
இருவருக்குமான இந்த கள்ளத்தொடர்பு ஒருகட்டத்தில் கணவனுக்கு தெரியவந்தது. இதனால், தனது மனைவி ஊர்மிளாவை கண்டித்துள்ளார். ஆனால், அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து, தனது கள்ளக்காதலுடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், குடும்பத்தில் நடக்கும் சண்டை, சச்சரவுகள் குறித்து அந்த கிராமமே பேச ஆரம்பித்துவிட்டது.
ஊர்மிளாவின் பெற்றோரும் இதை கண்டித்தனர். ஆனால், ஒரே பிடிவாதமாக எனக்கு கள்ளக்காதலன் தான் வேண்டும் என நின்றார். இறுதியில், கணவன் மற்றும் குடும்பத்தினரின் தொல்லை தாங்காமல் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஊரைவிட்டு ஓட திட்டமிட்டார். ஆனால், இதை கணவர் தடுத்து நிறுத்தினார். பின்னர், கிராம மக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது.
அதில், ரிங்கு சாஹு தனது மனைவியுடன் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். உடனே, ஊர்மிளாவை காதலன் அவினாஷுக்கு உடனே திருமணம் செய்து முடித்தார். இதையடுத்து, இருவரும் அந்த ஊரைவிட்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Read More : “கதை எழுத துப்பு இல்ல”..!! இது உனக்கு பான் இந்தியா படமா..? கூலியை வெச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!