விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்தார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவைத்தார்.. முன்னதாக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்..
தேசிய கொடி ஏற்றி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது “ சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்களை போற்றி வணங்குகிறேன்.. நாட்டுக்காக உழைத்த தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது.. அனைவருக்குமான இந்தியா வேண்டும் என நம் தலைவர்கள் கனவு கனவு கண்டனர்..
பெரும்பாலான தியாகிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்.. ” என்று தெரிவித்தார்..
மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்தார்.. அதன்படி விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார்.. அதே போல் விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார்.. கட்டபொம்மன், வ.உ.சி, வழித்தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்…
2வது உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் படை வீரர்களுக்கு மாத நிதி உதவி ரூ.15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.. அதே போல் 2-வது உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு நிதி உதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்..
மேலும் “ ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.. மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.. சென்னை மாதவரத்தில் ரூ.22 கோடியில் முன்னாள் படை வீரர்களுக்கான தங்கும் விடுதி கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.. முன்னாள் படை வீரர்கள் தங்கு விடுதி, 33,000 சதுர அடி பரப்பில் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்.. மலைப்பகுதியில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்..” என்று தெரிவித்தார்..