18 வயது இளம்பெண்ணை 10 பேர் கொண்ட நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜனகாமுக்கு அருகே ஜங்கான் பகுதியை சேர்ந்தவர் 18 வயதான இளம்பெண். இவர், அதே பகுதியில் வசித்து வரும் முகமது ஒவைசி என்ற 23 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், நாளடைவில் இது காதலாக மலர்ந்துள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ஊர் சுற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று தனது காதலியை முகமது ஒவைசி அழைத்துள்ளார். காதலன் தான் என்ற நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் அவர் வர சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது காதலன் முகமது ஒவைசி மற்றும் அவரது நண்பர்கள் பவன்குமார், சிவக்குமார், அப்துல் கியூம், சாய் சரண் ரெட்டி, சாய்ராம், நுகலா ரவி, பூஜா சமந்த் ரெட்டி, ஜெட்டி சஞ்சய் ஆகியோர் இருந்துள்ளனர்.
இவர்களை பார்த்ததுமே அந்த இளம்பெண் சற்று யோசித்துள்ளார். பின்னர், காதலன் இருக்கிறான் என்ற தைரியத்தில் அவரும் காரில் ஏறிச் சென்றுள்ளார். இதையடுத்து, கார் ஒரு லாட்ஜுக்கு சென்றது. அங்கு ஒரு அறை எடுத்து, இளம்பெண்ணை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், அந்த இளம்பெண் வலியால் கதறி துடித்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால், இச்சம்பவம் குறித்து யாரிடமும் தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த கும்பலில் இருந்த ஒருவன் அந்த இளம்பெண்ணை மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்துள்ளான். ஆனால், அவர் மறுத்ததால், மிரட்டியுள்ளார். இதையடுத்து, வேறு வழியின்றி அந்த நபருடன் இளம்பெண் கோவா சென்றுள்ளார்.
அங்கு ரூம் எடுத்து, அந்த இளம்பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவர் சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு வந்ததும் நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தனது சகோதரியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசில் அவர்கள் புகாரளித்த நிலையில், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 10 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : ரசிகர்களே.. எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு..!! பிக்பாஸ் சீசன் 9 எப்போது தெரியுமா..?



