சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகம் வாங்கினாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் ரூ.100 கோடி வரை வசூலித்து விட்ட கூலி திரைப்படம் நேற்று, இந்தியாவில் மட்டும் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், இப்படத்துடன் போட்டிப் போடும் ‘வார் 2’ திரைப்படம் ரூ.53 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சுதந்திர தின விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறையால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு படம் பொதுவாக வெளியாகி, 4 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் ரிலீஸ் ஆகும். ஆனால், இப்போதே கூலிக்கு எதிர்மறையான விமர்சனங்கள், வரத் தொடங்கியுள்ளன. இதனால், அடுத்த மாதமே, அமேசான் பிரைம் ஓடிடியில் கூலி திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் வரவிருக்கும் தீபாவளிக்கு, ‘கூலி’ திரைப்படம், சன் டிவியில், சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
‘கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டதால் 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளை இந்த படத்திற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. குடும்பமாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஏமாற்றம்தான். எனவே, இப்படம் ஓடிடிக்கு வரும் போது இன்னும் அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : சென்னையில் பயங்கரம்..!! உணவக மாஸ்டரின் கழுத்தை அறுத்த 3 சிறுவர்கள்..!! காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்..!!