கேரள மாநிலத்தை சேர்ந்த சஜு (24) என்பவர், திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக காத்திருந்த பெண்ணை, தனது வீட்டு வேலைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் சஜு பறித்துள்ளார். மேலும், பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், சஜுவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். பின்னர், அந்த வாலிபர் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு சென்ற போலீசார், சஜுவை கைது செய்தனர். பின்னர், அவர் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த செல்போன்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதுதொடர்பாக அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, வேலைக்கு செல்லும் பெண்களையும் , வீட்டில் இருக்கும் பெண்களையும் குறிவைத்து தனது காரில் அழைத்து வந்து பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்து பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.
பின்னர், அந்த வீடியோவை காட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் அதே பெண்களை பலாத்காரம் செய்து வந்துள்ளார். வீடியோ அவனிடம் இருந்ததால், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்டு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இதேபோல் செய்து வந்துள்ளார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு வயதில் குழந்தை உள்ளது. பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களைத்தான் குறிவைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். பல்வேறு செல்போன்களை பயன்படுத்தி வந்த சஜு இன்ஸ்டா மூலம் விதவிதமான ரீல்ஸ்களை வெளியிட்டு இளம்பெண்களிடம் பழகி வந்துள்ளார். எனவே, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : சென்னையில் பயங்கரம்..!! உணவக மாஸ்டரின் கழுத்தை அறுத்த 3 சிறுவர்கள்..!! காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்..!!