மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. கூலி பட பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூலி படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது..
கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், காலை 9 மணிக்கு கூலி படம் வெளியானது.. வழக்கம் போல இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர்.. இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது..
ரசிகர்கள் கூலி படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் கூறினாலும், பொதுவான சினிமா பிரியர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.. இப்படியான கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூலி படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.. அதன்படி இந்த வெளியான முதல் நாளில் ரூ.151 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது.. அந்த பதிவில் “ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெக்கார்டு மேக்கர் & ரெக்கார்டு பிரேக்கர்.. கூலி 151 கோடிக்கு மேல் வசூலித்து உலகளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.. கூலி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..” என்று தெரிவித்துள்ளது..
Read More : சகோதரர் என ராக்கி கட்டி விட்டு.. தயாரிப்பாளரை மணந்த பிரபல தமிழ் நடிகை.. திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் வேற!