ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் கூரை இடிந்து விழுந்து விபத்து.. பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்.. மீட்புப் பணிகள் தீவிரம்..

humayun s tomb 1755258847 1

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் உள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு அறையின் கூரை இன்று இடிந்து விழுந்தது.. இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பேட் ஷா தர்காவின் சுவருடன் கட்டப்பட்ட ஒரு கழிப்பறையின் கூரை இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த.


14 முதல் 15 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… கல்லறை கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக மாலை 4.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவசரகால குழுக்கள் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்தத்.. இதுவரை 11 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.. இடிபாடுகளுக்கு சிக்கியிருப்பவர்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகிறது..

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பழமையான சுவர்கள், கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. முன்னதாக, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது பழைய மரம் ஒன்று விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணும் காயமடைந்தார், ஒரு காரும் சேதமடைந்தது.

RUPA

Next Post

ஒரே சார்ஜில் 500 கி.மீ. ரேஞ்ச்.. மாருதி இ-விட்டாரா எப்போது அறிமுகம்? விலை எவ்வளவு? முழு விவரம் இதோ..

Fri Aug 15 , 2025
மாருதி சுசுகி சமீபத்தில் தனது முதல் மின்சார கார் இ-விட்டாராவை (Maruti e-Vitara) அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கார் இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு இ-விட்டாரா செப்டம்பர் 3, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படும். மாருதி இ-விட்டாரா இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பது மட்டுமல்லாமல், குஜராத்தில் உள்ள சுசுகி மோட்டார் ஆலையிலிருந்து ஜப்பான் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மாருதி […]
Maruti e vitara

You May Like