பாகிஸ்தானில் மீட்புப் பணியின் போது MI-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பணியாளர்கள் உயிரிழந்தனர்.. கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்..
மோசமான வானிலை காரணமாக மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் விபத்து ஏற்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற மாகாண அரசாங்கத்தின் MI-17 ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
வடக்கு பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இப்பகுதியில் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதில மலைப்பகுதிகளைக் கொண்ட கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மட்டும் 150 இறப்புகள் பதிவாகியுள்ளன தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது..
வடமேற்கு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை மையம் எச்சரித்துள்ளது.. 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.. இதில் அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளத்தில் மூழ்கியது.. 1,700 பேர் இதில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.