fbpx

சிம்பு திருமணம் செய்து கொள்ளப்போகும் மணப்பெண் தொழிலதிபரின் மகளா..? தீயாய் பரவும் தகவல்..!!

சிம்புவின் நடிப்பில் கடைசியாக ‘பத்துதல’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, அவரின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சிம்புவின் திருமணப் பேச்சுக்கள் மீண்டும் தலை தூக்கத் தொடங்கிவிட்டன. அதாவது, சிம்பு இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. ஆனால், அது பின்னர் வதந்தி எனத் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சிம்பு ஆந்திராவை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும், சினிமா ஃபைனான்ஸியருமான ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக சிம்பு தரப்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இதனால், இது எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Chella

Next Post

எவ்வளவு முயற்சி பண்ணியும் முடியலையே, தமிழக மாணவியின் உயிரைக் குடித்த நீட் தேர்வு.....! இதற்கு என்னதான் முடிவு....?

Thu Sep 28 , 2023
மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், மத்திய அரசு சார்பாக நடத்தப்படும்  நீட்த்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நம்மால் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியின் காரணமாக, தமிழகத்தைச் சார்ந்த பல மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில், மட்டும் தான் இப்படி ஒரு அவலம் நிகழ்கிறது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் இது போன்ற அசம்பாவிதம் நடப்பதே […]

You May Like