முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை!. இப்படி வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும்!

Aadi krithika 11zon

ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் மாதங்களில் 4வது மாதமான ஆடி மாதத்தில் ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஆடி கிருத்திகை. முருகப் பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை இந்தாண்டு 2 முறை வரும். பழநியில் ஜூலை 20 தேதி கொண்டாடப்பட்டது. திருத்தணி, வடபழநி ஆகிய முருகன் கோவில்களில் ஆகஸ்ட் 16ம் தேதியான இன்று ஆடிக்கிருத்திகை விழா கொண்டாப்படுகிறது.


பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு முறை ஒரு நட்சத்திரம் வந்தால் இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பஞ்சாங்க சாஸ்திரம் சொல்கிறது. அதன் படி பார்த்தால் ஆகஸ்ட் 16ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை. ஜூலை 20, ஆகஸ்ட் 16 இரண்டுமே கிருத்திகை நட்சத்திரம் தான். மேலும் ஆடி கிருத்திகை நாளில், சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராடி தங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும். இந்த நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும்.

நட்சத்திர கோலம் போட்டு ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துகளை எழுதி அந்த நட்சத்திரக் கோலத்தைச் சுற்றி மண் அகல் தீபத்தை வைத்து, முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. முருகப்பெருமானுக்குச் சுத்தமான பசும் பாலில், நாட்டுச் சர்க்கரை போட்டு நிவேதனமாக வைக்கலாம், அல்லது சர்க்கரைப் பொங்கலை நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து மணக்க மணக்கச் சமைத்து நிவேதனமாக வைக்கலாம்.

பூஜையறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்குப் பூக்களால் அலங்காரம் செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்குப் புதியதாகப் பூக்களைச் சூட்டி, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பழங்களை நிவேதனம் வைத்து, பூஜையறையில் அமர்ந்து உணவு, நீர் என எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.

பின்னர் வீட்டின் பூஜை அறை அல்லது முருகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னதாக விரதத்தைத் தொடங்கவும். இந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடக்கூடாது. உடல் நலம் பாதிப்புக்குள்ளவர்களாக இருந்தால் கொஞ்சமாக பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை செய்துவிட்டு விரதத்தை சைவ உணவுகளோடு முடித்துக் கொள்ளலாம். ஒருவேளை அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்பவர்களாக இருந்தால், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி விரதத்தை முடிக்கவும்.

இவ்வாறு ஆடி கிருத்திகை விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வழிபாட்டு சடங்குகளில் பங்கேற்பதன் மூலமும் பக்தர்கள் முருகனின் மீதான நம்பிக்கையையும், பக்தியையும் உறுதிப்படுத்திக் கொள்வதோடு, வளமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான ஆசியைப் பெறுவார்கள். ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சிவன், பார்வதியின் அருளால் உருவானவர் முருகப்பெருமான் என கூறப்படுகிறது. குழந்தையிலிருந்தே இவர் 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். இந்த 6 பெண்களைக் கௌரவிக்கும் விதமாக கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்றும் குழந்தை பேறு உண்டாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Readmore: “மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி…!

KOKILA

Next Post

பெரும் சோகம்..! பாகிஸ்தானில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 154 பேர் பலி...!

Sat Aug 16 , 2025
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் மலை பாங்கான கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வட மேற்கு பஜாவுர் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் […]
flood 2025

You May Like