கிருஷ்ண ஜெயந்தி நாளில் தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா? இன்றைய நிலவரம் இதோ..

Lord krishna and gold

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.74,200க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் ரூ.2000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது.. ஆனால் இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை குறைந்தது.. கடந்த 4 நாட்களில் ரூ.1200-க்கு மேல் விலை குறைந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்தது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.9,275-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.74,200 விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : தங்கத்தில் முதலீடு செய்வது வீண் வேலையா? உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் சொன்ன ஷாக் தகவல்..

English Summary

Gold prices in Chennai fell by Rs. 40 per sovereign today and are being sold at Rs. 74,200.

RUPA

Next Post

வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த SBI..! ஆகஸ்ட் 15 முதல் இந்த கட்டணம் உயர்வு..!!

Sat Aug 16 , 2025
சில்லறை வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆகஸ்ட் 15 முதல் அதன் உடனடி கட்டண சேவைக்கான பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 8 முதல் அமலுக்கு வரும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் உங்களுக்கு கணக்கு உள்ளதா? ஆனால் நீங்கள் இதை அறிந்திருக்க வேண்டும். நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, IMPS […]
SBI bank

You May Like