திக – திமுகவினரால் பெரிதும் போற்றப்படும் திருவாரூர் அர. திருவிடம் காலமானார்.. பெரியாரின் தொண்டன், கருணாநிதி, ஸ்டாலின் ஆதரவாளரான இவர் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.. ‘கலைஞரின் காலடி சுவடுகள்’, ‘திமுக பெற்ற வெற்றிகளும், வீரத்தழும்புகளும்’, ‘திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ உள்ளிட்ட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்..
திராவிட கொள்கைகள், சுயமரியாதை சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரின் புத்தகங்கள் அமைந்தன.. இவருக்கு கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் இலக்கிய மாமணி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..