அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் தொடரும் சோதனை.. ED மீது பாய்ந்த வழக்கு.. என்ன நடந்தது?

Minister I Periyasamy ED Raid

எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்..

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிகாலை திடீரென சோதனை நடத்தினர்.. மேலும் அவரது மகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.. சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.. இதை தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்..


ஆனால் எம்.எல்.ஏ விடுதியின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.. ஒருகட்டத்தில் அதிகாரிகள் விடுதியின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முடிவு செய்தனர்.. பின்னர் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் சாவி கொடுத்ததை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர்..

இதையடுத்து எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : “ரசிகர்களை வைத்து மட்டும் விஜய் ஜெயிக்க முடியாது.. அவர் களத்திற்கு வரணும்..” செல்லூர் ராஜு சாடல்..

RUPA

Next Post

புதிய மரபணு மாற்றத்தால் புற்றுநோயை நிறுத்த முடியுமா? விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு..

Sat Aug 16 , 2025
உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]
Natural Killer Cell Destorying Cancer Cell Illustration 1

You May Like