நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வரும் 18-ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை கனமழை தொடரும்.. அதன்படி இன்று வட தமிழகம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தேனியில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை, வட தமிழகம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
வரும் 18 முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் நாளையும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி வரையிலும், அதிகபட்ச வெப்பநிலை 33 -34 டிகிரி வரை இருக்கக்கூடும்..”
இன்று முதல் 20-ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், வட தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடை இடையே 65 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்..” என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
Read More : அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் தொடரும் சோதனை.. ED மீது பாய்ந்த வழக்கு.. என்ன நடந்தது?