பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் காலமானார்.. அவருக்கு வயது 80. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டு பாஜகவில் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராகவும் இல. கணேசன் இருந்தார்.. கண்ணியமான பேச்சுக்கும் அறியப்பட்டவர் இல. கணேசன். பாஜக தேசிய செயலர், தேசிய துணை தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்..
தமிழ்நாட்டில் பாஜகவை கடை கோடிக்கும் சென்று சேர்த்தவர் கணேசன்.. பாஜக தேசிய செயலர், தேசிய துணை தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்.. 2021-ம் ஆண்டு ஆக.27-ல் மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் பொறுப்பேற்றார்.. பிப்.2023 வரை அவர் பணியாற்றினார்.. இடையே 2022, ஜூலை 18 முதல் நவம்பர் 17 வரை மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.. 2023 பிப்ரவரி 20 முதல் நாகாலாந்து மாநில ஆளுநராக இல. கணேசன் பொறுப்பு வகித்து வந்தார்.. தஞ்சையில் பிறந்த அவர் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தின் ஆளுநராக திறம்பட பணியாற்றி வந்தார்..
அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. நேற்றிரவே முதலமைச்சர் ஸ்டாலின் இல. கணேசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.. இந்த நிலையில் இன்று மீண்டும் அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.. நாகாலாந்து மாநில தலைமை செயலாளரும் இல, கணேசனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்..
இந்த நிலையில் மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவரின் உடலுக்கு 42 குண்டுகள், 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.. இதையடுத்து இல. கணேசனின் உடல் பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.. முப்படையினரின் ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது..