மாலி பேரரசின் 14 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான மான்சா மூசா, இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இன்று உயிருடன் இருக்கும் எந்த கோடீஸ்வரரையும் விட அவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம்..
மான்சா மூசா 1280 இல் ஆட்சியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு-பக்ர் 1312 வரை ஆட்சி செய்தார். அபு-பக்ர் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார்.. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் அடிமைகளை ஏற்றிச் செல்லும் 2,000 கப்பல்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அவர்கள் திரும்பி வரவே இல்லை, அவர்களுக்கு என்ன ஆனது என்பது இன்று வரை ஒரு மர்மமாகவே உள்ளது.
இவான் வான் செர்டிமா போன்ற சில வரலாற்றாசிரியர்கள், அவர்கள் தென் அமெரிக்காவை அடைந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அபு-பக்ர் மறைந்த பிறகு, மான்சா மூசா அரியணையில் ஏறினார்.. அவர் தனது பேரரசை 24 நகரங்களாக விரிவுபடுத்தினார்.. அவற்றில் டிம்பக்டு நகரம் உட்பட 2,000 மைல்கள் உள்ளடக்கிய பெரும் பகுதியை அவர் ஆட்சி செய்தார்.. செனகல், மவுரித்தேனியா, மாலி, புர்கினா பாசோ, நைஜர், காம்பியா, கினியா-பிசாவ், கினியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்
மான்சா மூசாவின் தங்கப் பேரரசு
மான்சா மூசாவின் கீழ் மாலி பேரரசு, பெரும் அளவிலான தங்கம் மற்றும் உப்பு வளங்களை கொண்டிருந்தது.. அன்றைய காலக்கட்டத்தில் உலகில் உள்ள அனைத்து தங்கத்திலும் கிட்டத்தட்ட பாதியை அவரின் பேரரசு உற்பத்தி செய்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் வர்த்தக வழிகள் இன்னும் அதிக செல்வத்தைக் கொண்டு வந்தன. இன்றைய நாணயத்தில், எடுத்துக் கொண்டால் மான்சா மூசாவின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர் முதல் 500 பில்லியன் டாலர் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது… அதாவது இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் கோடி..
பொருளாதாரத்தை மாற்றிய கெய்ரோ வருகை
1324 ஆம் ஆண்டில், மான்சா மூசாவின் புகழ்பெற்ற மெக்கா யாத்திரையை எகிப்தின் கெய்ரோ வழியாக கடந்து சென்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான மக்களும் நூற்றுக்கணக்கான ஒட்டகங்களும் தங்கத்தை சுமந்து சென்றன என்று நம்பப்படுகிறது. அவர் 3 மாதங்கள் கெய்ரோவில் தங்கி, அதிக தங்கத்தை தானமாக வழங்கினார் என்று கூறப்படுகிறது.. எனினும் தங்கத்தின் மதிப்பு கடுமையாகக் குறைந்தது, இது எகிப்திலும் மத்திய கிழக்கு முழுவதும் பத்து ஆண்டுகால பொருளாதார மந்தநிலையைத் தூண்டியது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, தங்க மதிப்பிழப்பு காரணமாக சுமார் 1.5 பில்லியன் டாலர் இழப்புகளை ஏற்படுத்தியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மான்சா மூசா பின்னர் சிக்கலை சரிசெய்ய அதிக வட்டிக்கு தங்கத்தை கடன் வாங்கினார். மூசாவின் தாராள மனப்பான்மை அவருக்கு தங்கம் பற்றாக்குறையை ஏற்படுத்தியதாக சிலர் கூறுகின்றனர்.
திம்புக்டு : ஒரு உலக கற்றல் மையம்
தனது ஆட்சிக் காலத்தில், மான்சா மூசா கலை மற்றும் கல்விக்காக அதிக செலவு செய்தார். அவர் ஒரு கவிஞருக்கு 200 கிலோ தங்கத்தை வழங்கினார். அவர் பள்ளிகள், நூலகங்கள் மற்றும் மசூதிகளைக் கட்டினார். திம்புக்டு நகரை உலகப் புகழ்பெற்ற கற்றல் மையமாக மாற்றினார். மெக்கா, மதீனா மற்றும் அண்டலூசியா உள்ளிட்ட இஸ்லாமிய உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் வந்தனர்.
புனித யாத்திரையிலிருந்து திரும்பிய மான்சா மூசா, நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்கள் மற்றும் அண்டலூசிய கவிஞர்-கட்டிடக் கலைஞர் அபு எஸ் ஹக் எஸ் சஹேலி உட்பட பல இஸ்லாமிய அறிஞர்களை தன்னுடன் அழைத்து வந்தார். அபு எஸ் ஹக் டிஜிங்குரேபர் மசூதியை வடிவமைத்தார், இது இன்றும் திம்புக்டு நகரில் ஒரு அடையாளமாக உள்ளது.
பேரரசின் வீழ்ச்சி
மான்சா மூசா 1337 இல் 57 வயதில் இறந்தார்.அவரது மகன்களால் பேரரசை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. சிறிய மாநிலங்கள் பிரிந்தன, மேலும் மேற்கு ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகை பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது..
மான்சா மூசாவின் தாராள மனப்பான்மை மாலி உலகளவில் பிரபலமானது. 1375 ஆம் ஆண்டு கட்டலான் அட்லஸ் வரைபடம், ஒரு ஆப்பிரிக்க மன்னர், திம்புக்டு நகரில் ஒரு தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து, ஒரு தங்கக் கட்டியை பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அது மான்சா மூசா தான் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..
Read More : எந்த நாட்டில் அதிக நாய்கள் உள்ளன? இந்தியா எந்த இடத்தில் உள்ளது? உலகின் டாப் 10 லிஸ்ட் இதோ..