இளம் வயதிலேயே இந்த பழக்கம் இருக்கா..? அப்படினா பித்தப்பை கல் வருவது உறுதி..!! மருத்துவர்கள் வார்னிங்..!!

Gallstone 2025

இன்றைய காலட்டத்தில் பெரும்பாலானவர்கள் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக வயது என்ற வரம்பே இல்லாமல், இளம் தலைமுறையினர் அதிக மருத்துவ பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்களில் முக்கியமானதாக, பித்தப்பை கல் (Gallstones) பிரச்சனை இருக்கிறது.


அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பித்தப்பை கல் தொடர்பான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணமே நம் உணவுக் கலாச்சாரம் தான். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரீஹீட் செய்யப்பட்ட எண்ணெய்களில் சமைக்கப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட்கள், அதிக கொழுப்பு உணவுகள் இவை அனைத்தும் பித்தப்பையின் செயல்பாட்டில் அதிக அழுத்தத்தை தருகின்றன.

பித்தப்பையின் முக்கிய பங்கு என்ன.? அது சிறுநீரகங்களைப் போலவே, சிறிதாக இருந்தாலும் உடல் செயல்பாட்டில் மிக முக்கியமான உறுப்பாகும். இது வெளியிடும் பைல் (bile) எனும் திரவம் கொழுப்பை செரிக்க உதவுகிறது. ஆனால், நம் உடலில் அதிக கொழுப்பு சேரும்போது, பைல் அதிகம் சுரக்கும். சில நேரங்களில், அந்த திரவம் சீராக சுரக்கப்படாமலோ, அதில் உள்ள கட்டிகள் ஓயாமல் படிவெடுப்பதாலோ பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

இதனால், இளம் வயதிலேயே பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் பிரியாணி, பரோட்டா போன்ற ஹெவியான மற்றும் சீக்கிரம் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிடுவதால் தான். இந்த உணவுகள் உடல் மீது தாங்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, செயற்கையா உணவுகளை குறைத்துவிட்டு காய்கறிகள், பழங்கங்கள் போன்ற இயற்கையான உணவுகளை சாப்பிட வேண்டும். உடலில் எந்த உறுப்பும் முக்கியமல்லாதது என்று கூற முடியாது. பித்தப்பை செயலிழக்கும்போது, அதை அகற்றுவதால் உடலின் மற்ற உறுப்புகள் மீது அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு தவறான உணவுப் பழக்க வழக்கம், நீண்டகால உடல் பாதிப்புக்கு வித்திடும். இன்றைய தலைமுறையினர், உணவிற்குள் சுவையைக் காண்பதைவிட, அதன் அருமையை உணர்ந்து உண்பது அவசியம் என்பதை உணர வேண்டும்.

Read More : உங்களுக்கு யாராவது செய்வினை வெச்சிருக்காங்களா..? இந்த அறிகுறிகள் இருந்தால் கன்ஃபார்ம்..!!

CHELLA

Next Post

மருத்துவ படிப்பிற்கு இடம்... இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்..! தமிழக காவல்துறை எச்சரிக்கை...!

Sun Aug 17 , 2025
மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது என்றும், இது போன்ற இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை, நீட் தேர்வில் தேர்ச்சிப் […]
neet police 2025

You May Like