கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கள்ளியூரை சேர்ந்தவர் சுனில். இவருக்கு 42 வயதாகும் நிலையில், தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பின்சி (36). இவர், பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக துணை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை குழந்தை இல்லை.
இதற்கிடையே, கணவர் சுனில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மனைவி பின்சி அடிக்கடி இரவு நேரத்தில் செல்போனில் யாரிடமோ மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். கணவர் கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்றும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். மறுநாள் பின்சி வேலைக்கு போகவில்லை.
பின்னர், அவருடன் பணிபுரிபவர் பின்சி சொல்லாமல் விடுமுறை எடுத்ததால், அவருக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையா என்பதை விசாரிப்பதற்காக பின்சி வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், பின்சி அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், சடலமாக கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவரே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பின்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், கணவனை பிடித்த விசாரிக்கையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வெட்டிக் கொன்றுவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்து கணவன் சுனிலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.