விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் உட்கோட்டத்தில் கடலோர ஊர்க்காவல்படையில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆயுதப்படை டிஎஸ்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்காவல்படையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலி பணியிடங்களை நிரப்ப, விழுப்புரம் மாவட்ட எஸ்பியின் உத்தரவின்படி, கோட்டக்குப்பம் காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள ஆண்களிடமிருந்து வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகுதிகள் :
- குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- 20 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
- பொதுசேவையில் ஈடுபடுபவராகவும், தன்னார்வலராகவும் இருக்க வேண்டும்.
- எந்தவொரு குற்றசெயலிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும்.
- எந்தவொரு சாதி, மத அரசியல் அமைப்புகளிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
- அரசு ஊழியராக இருந்தால், அத்துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மாதத்திற்கு 5 நாட்கள் மட்டும் பணியாற்ற அழைக்கப்படுவார்கள். மாதம் ரூ.2,800 மதிப்பூதியம். நாட்களுக்கு தலா ரூ.560 வழங்கப்படும்.
தகுதியான நபர்கள், வரும் 25ம் தேதிக்குள், விண்ணப்பங்களை விழுப்புரம் ஆயுதப்படை அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், விழுப்புரம் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.