இரவு 7 மணி வரைக்கு விடாது.. அடித்து பெய்யப் போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்..!! எங்கெல்லாம் தெரியுமா..?

rain 1

வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி நாளை வலுவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (17-08-2025) காலை 08. 30 மணி அளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 19 ஆம் தேதி மாலையில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சியிலும் மிதிமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

17-08-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

19-08-2025 முதல் 23-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் நாளை (18-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

17-08-2025 முதல் 19-08-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Read more: “உன்னைவிட அவன் தான் முக்கியம்”..!! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மெகா பிளான் போட்ட காதலி..!! காட்டிக் கொடுத்த மகள்கள்..!!

English Summary

Rain likely at various places in Tamil Nadu as low pressure area is expected to strengthen tomorrow

Next Post

ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் ரயிலில் இலவசமாக பயணம் செய்றாங்களா..? சலுகைகள் என்னென்ன..?

Sun Aug 17 , 2025
Railway employees and their family travel for free in trains? The answer will leave you in shock
Railway employees 1

You May Like