பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவர், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு பழமை வாய்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர். தமிழகத்தில் பிறந்த இவர் பாஜக மூலமாக தான் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் பாஜக உறுப்பினராகப் போட்டியிட்ட அவர், அந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தமிழக பாஜக மாநிலத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார். மேலும் மார்ச் 2024 முதல் ஜூலை 2024 வரை தெலுங்கானா ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) மற்றும் புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பதவி வகித்துள்ளார்.
Read More: ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் ரயிலில் இலவசமாக பயணம் செய்றாங்களா..? சலுகைகள் என்னென்ன..?