உடனே சார்ஜ்ர், பவர் பேக்அப் போன்றவையை ரெடியா வைங்க..! தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 18, 2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்..! முழு விவரம்…!

power cut 1

தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, இன்று (ஆகஸ்ட் 18, 2025) சில இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த மின் தடை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அறிவித்துள்ளது.


மேலும் இந்த மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிந்துவிட்டால், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் பற்றி மின்வாரியம் தனித்தகவல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் மற்றும் மேலதிக தகவல்களுக்கு, மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரி பார்க்கலாம்.

மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல்:

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: பல்லாவரம் பகுதியில் பல்லாவரம் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்கா சாலை, பல்லவா கார்டன், வைத்தியலிங்கம் சாலை, இசா பல்லாவரம், ஆபீசர்ஸ் லேன், எஸ்.என்.பி.ஆகிய இடங்களிலும், திருவான்மியூரில் காவேரி அபார்ட்மென்ட், எல்.பி சாலை, பாஷ்யம் கட்டுமானம், இந்திரா நகர் 2-வது தெரு, 1 மற்றும் 2-வது அவென்யூ, மெயின் ரோடு மற்றும் கிராஸ் தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, காமராஜ் அவென்யூ ஆகியவற்றிலும், புழல் பகுதியில் ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், பை பாஸ் ரோடு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, பேரோடு, குமிளம்பரப்பூர், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கம்பன் நகர், நொயல் நகர், சத்தியநாராயண புரம், பட்டணம், பட்டணம் புதூர், பள்ளபாளையம் இபி அலுவலகம், கரவலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சி புரம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: அன்பு நகர், காஜாமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே காலனி, இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா நகர், அருணாச்சலம், ஓகூர் காலனி, சாக் காலனி, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, யுகேடி மலை, கல்லங்காடு ராமலிங்க நகர், கலெக்டர் அலுவலக சாலை, பாத்திமா நகர், வாலாஜா சாலை குமரன் நகர், நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டு பட்டி, பிடாரி கோவில், அழகப்பட்டி, மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, குட்டி மலை, அரசு காலனி, ராஜீவ் காந்தி நகர், கேஆர்எஸ் நகர், ஆர்எம்எஸ் காலனி, சர்க்யூட் ஹவுஸ் காலனி, ஈபி காலனி, காஜா நகர், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், வஉசி சாலை, கன்டோன்மென்ட், இஎஸ்ஐ மருத்துவமனை, லிங்கம் நகர், ப்ரோமினந்த் சாலை, பாண்டமங்கலம், கோரிமேடு, காஜாபேட்டை, வாசன் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், என்எஸ் நகர், செளமண்டி, வாங்கியோடைப்பட்டி, குட்டம், மின்னுக்கம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி: கொல்லங்கோடு, நீரோடு, வல்லவிளை, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கண்ணனாகம், புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, புதுத்துறை, இரணியபுரம், கிள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை: தாய்முடி, பெரிய கல்லாறு, உயர்காடு, ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு ஆகிய பகுதிகளிலும்,
பெரம்பலூரில் பேரலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி ஆகிய பகுதிகளிலும், சேலத்தில் அனத்தனப்பட்டி, தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, மில், டவுன்-I, டவுன்-II, டவுன்-III, மணியனூர், பூலாவரி, கரட்டூர் ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More: குழந்தையை ரயிலுக்கு வெளியே இறக்கி விட்ட மர்ம நபர்.. பிளாட்பாரத்தில் கதறிய பிஞ்சு உயிர்.. பரபரத்த பரங்கிமலை..!!

Newsnation_Admin

Next Post

Rain Alert: உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி...! நாளை முதல் 23-ம் தேதி வரை மழை...!

Mon Aug 18 , 2025
தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த […]
rain 1

You May Like