fbpx

மகிழ்ச்சி…!மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை…! வெளியான பெயர் பட்டியல்…! உங்க பெயர் இருக்கா…?

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு ஊக்கத்தொகைக்கான 1000 பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 02.08.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 17.08.2023 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு 10.09.2023 அன்று நடைபெற்று முடிந்தது. தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்ற நபர்களின் பட்டியல் விவரம்: https://drive.google.com/file/d/1LZvM1SSXsGxT51fKaUzwPYJJhIvKzAh6/view?usp=drivesdk

Vignesh

Next Post

இன்று புரட்டாசி சனிக்கிழமை..!! ஒரு கைப்பிடி துளசி போதும்..!! பெருமாளை இப்படி தரிசித்து பாருங்கள்..!!

Sat Sep 30 , 2023
இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் பெருமாள். புரட்டாசி மாதத்தின் எல்லா நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை. பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதத்தில் புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறும். […]

You May Like