பொல்லாத கண் திருஷ்டியும் ஒரு நொடியில் பறந்து போகும்..!! அமாவாசை அன்று வீட்டில் இப்படி பண்ணுங்க..!!

Eye Poojai 2025

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வளர்ச்சி பெறும் போது அதை பாராட்டும் மனதுக்கு பதிலாக பொறாமை, எதிர்மறை எண்ணங்கள் பெருகும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, பலருக்கு கண் திருஷ்டி அல்லது தீய சக்தி தாக்கம் ஏற்படுகிறது.


அறிவியல் அதனை ஏற்கக்கூடாது என்றாலும், பாரம்பரிய அறிவும் வாழ்க்கைப் பார்வையும் கண் திருஷ்டி உண்மை என பலரையும் நம்ப வைக்கிறது. இதன் தாக்கமாக குழந்தைகள் தூக்கமின்றி அழுவது, நோய்வாய்ப்படுவது, குடும்பத்தில் இடையூறுகள், திடீர் நஷ்டங்கள், மனச்சோர்வு போன்றவையும் ஏற்படலாம்.

இந்த கண் திருஷ்டிக்கு பழங்கால பரிகாரம், சிறந்த பலனை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் இந்த கலவையை வைத்து, தீய சக்திகளை விரட்டும் பாரம்பரிய வழிமுறையை தற்போது பார்ப்போம்.

முதலில் ஒரு பாதி தேங்காய் சிரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு கல் உப்பு, வெண் கடுகு, மிளகு, வர மிளகாய், வீட்டு வாசலில் இருக்கும் மண், கரி துண்டுகள், கற்பூரம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், வீட்டில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி அமரவோ, நிற்கவோ வேண்டும். இதையடுத்து, மேலே கூறப்பட்ட கலவையுடன் உள்ள சிரட்டையை வைத்து, முதலில் வலம் புறமாக மூன்று முறை, பின்னர் இடம்புறமாக மூன்று முறை சுற்ற வேண்டும். அதன் பின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூன்று முறை சுற்ற வேண்டும். இதை வீட்டின் முன்னிலை பெரியவர் முதன்மையாக ஆண் நபர் செய்வது சிறந்தது.

திருஷ்டி கழித்து முடித்தவுடன், அந்த சிரட்டையில் உள்ள கலவையை தீப்பற்றி எரிக்க வேண்டும். பாரம்பரிய வழக்கப்படி, இதை முச்சந்தி அல்லது நாற்சந்தியில் எரிக்க வேண்டும். ஆனால், இன்றைய நகர வாழ்வில், அது சாத்தியமில்லையெனில், வீட்டின் ஒரு வெளிப்புற மூலையில் பாதுகாப்பாக எரிக்கலாம். இது ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை தினத்தில் செய்வது நல்ல பலனளிக்கும். ராகுகாலம், எமகண்டம் தவிர்த்து, காலை அல்லது மாலை நேரங்களில் செய்வது சிறந்ததாக கூறப்படுகிறது.

பொறாமை, எதிர்மறையான எண்ணங்கள், மனதின் தீய சக்திகள் போன்றவை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை. ஆனால், அவை நம்மை தாக்காமல் இருக்க சில நம்பிக்கைகளை கடைப்பிடிப்பது, மனதை உறுதியடைய செய்யும். பாரம்பரிய வழிமுறைகள், நம் முன்னோர்களின் அனுபவங்களால் உருவானவை. அது தெய்வீக சார்ந்தது மட்டுமல்ல.. வாழ்க்கையை நிம்மதியாக எதிர்கொள்ளக் கூடியவையாகும்.

Read More : குலதெய்வத்திற்கு எந்த நாளில் விரதம் இருக்கலாம்..? இப்படி செய்தால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.!!

CHELLA

Next Post

பால் - டூத் பேஸ்ட் முதல் மொபைல்-சோப்பு வரை!. ஜிஎஸ்டி மாற்றத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

Mon Aug 18 , 2025
ஜிஎஸ்டி முறையை எளிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கப் போகிறது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். வரி முறையை சாமானிய மக்களுக்கும் வணிகர்களுக்கும் எளிதாக்கும் வகையில் ஜிஎஸ்டி கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். தற்போது, நாட்டில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 […]
GST price 11zon

You May Like