திருமாவளவனுக்காக துப்பாக்கி உபகரண தொழிற்சாலையில் மாமூல் கேட்டு அடாவடி..!! விசிக நிர்வாகி தட்டித் தூக்கிய போலீஸ்..!!

Thiruma 2025

திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு மாமூல் கேட்டு அடாவடி செய்த விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (வயது 45), திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலராக உள்ளார். இவர், கடம்பத்துார் ஒன்றியத்தில் இயங்கி வரும் ‘கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி’ என்ற துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் தனியார் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். இந்த தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக விஸ்வநாத் (வயது 50) பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுக்காக, செலவுகளை தொழிற்சாலை தரப்பே ஏற்க வேண்டும் எனவும் அதற்கு பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, விஸ்வநாத் அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவின் உத்தரவுப்படி, மணவாளநகர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், விசிக நிர்வாகி குமாரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரை கிளைச்சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : கோயிலில் பலியிடப்பட இருந்த எருமை கன்றுக்குட்டி.? சீரியல் நடிகையின் அதிர்ச்சி வீடியோ..!! அடுத்து நடந்த திருப்பம்..!!

CHELLA

Next Post

இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்... 70 வயது கடந்த பெண்களுக்கு மாதம் ஓய்வூதியம்...!

Mon Aug 18 , 2025
மகளிர் நலன், மறுவாழ்வு, அதிகாரம் வழங்குதல், கல்வி, ஆதரவற்ற மகளிருக்கு வேலை வழங்குதல் போன்றவற்றுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்வதார்க்ரே திட்டம்: இத்திட்டம், குடும்ப முரண்பாடு, குற்றம், வன்முறை, மனஅழுத்தம், சமூகப் புறக்கணிப்பு போன்ற கடினமான சூழல்களில் உள்ள மகளிருடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பாதிக்கப்பட்ட மகளிருக்கு, தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, மருத்துவம், பயிற்சி, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம், பொருளாதார ரீதியாகவும், உணர்வு […]
Money 2025 1

You May Like