fbpx

அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ்..!! அபராதம் விதிக்கிறார்களா..? மக்களே ஏமாந்துறாதீங்க..!! ரிசர்வ் வங்கி சொல்வதை கவனீங்க..!!

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால், வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. அந்த கட்டணங்களை நாம் கட்டாயமாக செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் வங்கிக் கணக்கு காலியாக இருக்கும்போது என்ன நடக்கும்..?

வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், வங்கிகள் கட்டணம் விதிக்கின்றனவா அல்லது கணக்கு மைனஸில் செல்கிறதா என்ற கேள்வி எழும். அதுபற்றி அறிந்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த விதியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வங்கியும் அதற்கான தொகையை நிர்ணயம் செய்துள்ளன. இந்த தொகையை விட குறைவாக இருப்பு இருந்தால் கட்டணம் விதிக்கப்படும். வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு கட்டணங்களை விதிக்கின்றன. பொதுவாக நகர்ப்புறங்களில் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் கட்டணம் குறைவு தான்.

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையாகும். ஒரு மாதத்திற்குள் அந்தத் தொகையைப் பராமரிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும். இதற்காக வங்கிகள் எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்பும். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இருப்புத்தொகையை பராமரிக்க நேரம் கொடுக்கின்றன. ஆனால், இது ஒரு மாதம் வரை மட்டுமே இருக்கும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு, அபராதம் விதிக்கப்படும். இதுவே விதிமுறை.

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பதில் எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ அதே விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும். அதாவது நிலையான சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். இதற்காக வங்கிகள் சில அடுக்குகள் அடிப்படையில் கட்டணம் விதிக்கின்றன. மினிமம் பேலன்ஸ் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் கணக்கை எதிர்மறையாகவோ அல்லது கழிப்பதாகவோ எடுக்கக் கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையாகும். ஒருவேளை பணம் டெபாசிட் செய்யப்பட்ட பிறகு அதிலிருந்து தொகை பிடிக்கப்படலாம்.

Read More : பலே பிளான்..!! காதலனுடன் சேர்ந்து கோதுமை மாவில் விஷம் கலந்த காதலி..!! 13 பேரை கொன்ற ஜோடி..!!

English Summary

All bank account holders are required to maintain a minimum balance in the account.

Chella

Next Post

தூங்கிக் கொண்டிருந்த நண்பன்..!! தலையில் ஒரே போடு..!! துடிதுடித்து பலி..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

Mon Oct 7 , 2024
The incident of murdering a friend who was building a new house by a friend has caused a shock.

You May Like