நீங்கள் ரூ.100, ரூ.200, ரூ.500-க்கு பெட்ரோல் போடுபவரா..? இதை படித்தால் இனி அப்படி போட மாட்டீங்க..!!

petrol pumps 1 1

இன்றைய வாழ்கையில் வாகனமும், எரிபொருள் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பெரும்பாலானோரின் மாத சம்பளத்தில் நிச்சயமாக ஒரு பங்கை பெட்ரோலுக்காக ஒதுக்க வேண்டியிருக்கும். நகர வாழ்க்கையில் ஒரு குடும்பத்திற்குப் பொதுவாக இருசக்கர வாகனம் மட்டுமின்றி கார் போன்று பல்வேறு வாகனங்கள் வைத்திருப்பது சாதாரணம். அதேபோல் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறும் மோசடிகள், நம்மை மேலும் நஷ்டத்தை தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், நாம் சிறிது விழிப்புடன் இருந்தால் இந்த ஏமாற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும்.


வழக்கமாக நாம் கடைசி நேரத்தில், அவசரமான பயணத்தில், பெட்ரோல் பங்க் சென்று நிற்பது வழக்கம். அந்த வேகத்தில், வாகனத்தில் இருந்தபடியே பெட்ரோல் நிரப்பச் சொல்லி, பணம் கொடுத்து, நகர்ந்து விடுகிறோம். ஆனால், நாம் பெரும்பாலும் கவனிக்க மறுப்பது மீட்டர் “பூஜ்ஜியம்” நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதா? என்பதைத்தான்.

நீங்கள் செலுத்தும் தொகையை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் நிரப்பும் போது, உங்கள் முன் ஒருவர் ரூ.100க்கு பெட்ரோல் நிரப்பி இருப்பின், மீட்டரை திரும்ப க்ளியர் செய்யாமல், அடுத்ததாக நீங்கள் ரூ.500 சொன்னால், உண்மையில் உங்களுக்குப் பெறப்படும் பெட்ரோல் ரூ.400 மட்டுமே. மீட்டரில் ஏற்கனவே ஓடிய ரூ.100 சேர்ந்து காட்டப்படும். இது, பல பங்குகளில் பொதுவாக நடைபெறும் மோசடியாகும்.

மற்றொன்று ரூ.100, ரூ.200, ரூ.500 அல்லது ரூ.1000 போன்ற சரியான எண்களுக்கு பெட்ரோல் நிரப்புவது. இது நமக்கு வசதியாகத் தோன்றினாலும், உண்மையில் சில பெட்ரோல் நிலையங்களில், இந்த தொகைகளுக்கு முன்பே “ப்ரீசெட்” செய்யப்பட்ட அளவுகள் உள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதாவது, ரூ.100 சொன்னால், சரியான அளவு பெட்ரோல் வழங்கப்படாமல், இயந்திரத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குறைந்த அளவே வெளியாகும்.

எனவே, இனி ரூ.100, ரூ.200, ரூ.500 அல்லது ரூ.1000-க்கு எப்போதும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம். ரூ.110, ரூ.230, ரூ.555 போன்ற ஒற்றைப்படை எண்களில் பெட்ரோல் நிரப்பலா. இதை செய்தால் மோசடியில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். மேலும், விலை மலிவு என்பதற்காக எங்கு வேண்டுமானாலும் பெட்ரோல் நிரப்பக் கூடாது. கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் அல்லது டீசல் உங்கள் கார் எஞ்சினின் ஆயுளைக் கெடுத்துவிடும்.

பெட்ரோல் விலை உயர்வை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நமது கண் திறந்த முறையில் செயல்படுவது மட்டும்தான், நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நியாயமான அளவு பெட்ரோல் பெற வழிவகுக்கும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read More : பெற்றோர்களே..!! இதை கவனிக்காம விட்டா உங்க குழந்தைக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் வரும்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

CHELLA

Next Post

Wow! இந்தியாவுக்கு மீண்டும் ஜாக்பாட்.. டன் கணக்கில் குவிந்து கிடக்கும் தங்கம்.. எங்கு தெரியுமா?

Mon Aug 18 , 2025
பல மாவட்டங்களில் தங்க இருப்புக்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்கச் சுரங்கத்திற்கான புதிய மையமாக ஒடிசா உருவெடுத்துள்ளது. சமீபத்திய கனிம ஆய்வுத் திட்டங்களின் போது இந்திய புவியியல் ஆய்வு மையம் இவற்றை அடையாளம் கண்டுள்ளது.. தியோகர் (அடாசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் தங்க இருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. […]
Gold deposit

You May Like