லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வரும் ரஜினிக்கும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருக்கும் வில்லன் கும்பலுக்கும் என்ன தொடர்பு..? எதற்காக அந்த கும்பலை ரஜினி தேடிச் செல்கிறார்..? பின்னணியில் உள்ளது யார்? கூலிக்கும் ரஜினிக்கும் என்ன கனெக்ஷன் என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன்.
லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றால் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் இருக்கும். ஆனால், கூலி திரைப்படம் அது மிஸ்ஸிங் தான் என்று சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் திரைக்கதை நிதானமாக செல்கிறது. லோகேஷின் முந்தையப் படங்களை மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இருப்பினும், முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள கூலி திரைப்படம் 4 நாட்களில் தமிழ்நாட்டில் மாஸான கலெக்ஷன் செய்துள்ளது. அதாவது, 4 நாள் முடிவில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.