துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது..
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. இதை தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில், துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வைகோ நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது..
இந்த நிலையில் திடீர் திருப்பமாக திருச்சி சிவா அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது… இதுகுறித்து காங்கிரஸ் தலைமை திமுக தலைமை உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. இதன் மூலம் தமிழருக்கு தமிழர் என தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்தியா கூட்டணிக்கு பதிலடி கொடுத்துள்ளது.. மூத்த திமுக எம்பியான திருச்சி சிவாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களுடன் சுமூக நல்லுறவு உள்ளது. எனவே அவரை துணை குடியரசு தலைவராக நிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..