2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் ஆட் சேர்க்கை முகம் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ள ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும். தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆட்சேர்ப்பு ஆன்லைன் மூலம் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.) உடல் தகுதி மற்றும் மருத்துவத் தேர்வுகள் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிப்பதற்கு முன், www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தகுதி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை படித்துப்பார்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்னிவீர் திட்டம் என்றால் என்ன?
இந்திய ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் மத்திய அரசு 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய திட்டமே “அக்னிவீர் திட்டம்.” இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும் இளைஞர்கள்:
- 4 வருடங்கள் மட்டுமே பணியாற்றுவார்கள்.
- இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
- 6 மாத தீவிர பயிற்சி அளிக்கப்படும்.
- மருத்துவ வசதி மற்றும் காப்பீட்டு சேவைகளும் வழங்கப்படும்.
- 4 ஆண்டு பணிக்காலம் முடிந்த பிறகு, அதிகபட்சம் 25% பேர் வரை ராணுவத்தில் 15 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரந்தரமாக சேர்க்கப்படுவார்கள்.
- இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணியாற்றுவார்கள்.
- மீதமுள்ள 75% வீரர்கள், பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
- பணியில் இருந்து விடுபட்டவர்கள், பாதுகாப்பு தொடர்பான பிற மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்து பணி பெற முடியும்.
- இத்திட்டம் மூலம், ராணுவத்தில் குறுகிய கால சேவை அனுபவத்துடன், இளைஞர்கள் எதிர்காலத்தில் மற்ற வேலை வாய்ப்புகளுக்கும் தகுதியானவர்களாக மாறுவார்கள் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.
Read more: திடீர் ட்விஸ்ட்.. துணை குடியரசு தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா..? பாஜகவின் நகர்வுக்கு இந்தியா கூட்டணி பதிலடி?