லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் இந்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
லோகேஷின் முந்தைய படங்களான ‘கைதி’, ‘விக்ரம்’ போன்றவற்றில் இருந்த அதிரடி, வேகமான திரைக்கதை போன்ற அம்சங்கள் “கூலி” படத்தில் குறைவாகவே உணரப்பட்டுள்ளன. ஆக்ஷன், இண்டென்சிட்டி ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், சில ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
விமர்சனங்கள் மாறுபட்டாலும், “கூலி” தொடக்கம் முதலே திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளில் 150 கோடி வாஸூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கூலி படத்தின் 4 நாள் வசூலை விவரங்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் நான்கு நாட்கள் முடிவில் ரூ.404 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.