மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, ஊதிய உயர்வு, கொரோனா கால ஊக்கத் தொகை வழங்கல், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி சார்பில் மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தூய்மை பணியாளர்கள் போராடி வந்தனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் போராடி வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்துள்ளனர். மேலும் போரட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை பார்க்க வந்த அவர்களது பிள்ளைகளையும் காவல்துறையினர் தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். போலீசார் கைது செய்யும்போது தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள் அழுவது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.
ஏற்கனவே சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது மதுரை, நெல்லை, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த போராட்டம் பரவி வருகிறது.
Read More: 11 மணி நேர சோதனை.. அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சிக்கியது என்ன? ED அதிகாரப்பூர்வ தகவல்..