ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் அதிகரித்துள்ளது. பின்னர், இது, கள்ளக்காதலாக மாறியது.
தனது மனைவியின் நடத்தை சந்தேகமாக இருந்ததால், அரிகிருஷ்ணன் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தினார். அதில் மனைவியும், மதன்குமாரும் நெருக்கமாக இருந்த காட்சிகள் பதிவானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மதன்குமாரை வேலையில் இருந்து நீக்கிய அரிகிருஷ்ணன், தனது மனைவியையும் கண்டித்தார்.
இந்நிலையில், கணவனின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய பவானி மற்றும் மதன்குமார் இருவரும், அரிகிருஷ்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் திருவாரூரைச் சேர்ந்த கூலிப்படையினரை அணுகி, ரூ.15 லட்சம் பேரம் பேசி, அதில் முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அரிகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த கார், அவர் மீது மோதியது. ஆனால், இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பின்னர், அந்த கூலிப்படையினரிடம் இருந்து ஒரு அழைப்பை அரிகிருஷ்ணனுக்கு வந்தது.
அதில், “உன் மனைவி மற்றும் மதன்குமார் சேர்ந்து எங்களுக்கு ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறி, முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்து, உன்னை கொலை செய்ய சொன்னார்கள். ஆனால், நீ ரூ.5 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டுவிடுகிறோம்” என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அரிகிருஷ்ணன், உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பவானி மற்றும் மதன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றத்தையும் ஒப்புக்கொண்டனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் விக்னேஷ், விஜய், மணிகண்டன் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More : இந்த மாதிரியான உறவுகளை பக்கத்துலயே வெச்சிக்காதீங்க..!! உங்களுக்கு தான் டேஞ்சர்..!!