இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தினமும் பிரா அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு இது அசெளகரியமாக, சில சமயங்களில் மூச்சுத்திணறல் கூட ஏற்படும். முக்கியமாக, இறுக்கமாக உள்ள பிராக்கள் வலியும், தோலில் எரிச்சலும், தடிமனும் ஏற்படுத்தும்.
பொதுவாக பெண்கள் பயன்படுத்தும் பிராக்களில் பலவகைகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் இறுக்கமாகவே வடிவமைக்கப்பட்டிருப்பதால், சிலருக்கு உடலுக்கு ஏற்ற போதுமான சுதந்திரம் கிடைக்காமல் போகிறது. குறிப்பாக, உடலமைப்பிற்கு பொருந்தாத அல்லது அளவுக்கு மிஞ்சிய பிராக்கள், உடலைக் குறுக்கவைத்து, இன்னும் அதிகமான அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
இறுக்கமான பிரா அணிந்தால் புற்றுநோய் வருமா..?
பிரா அணிவதால், குறிப்பாக underwire bra, அணிவதால் மார்பக புற்றுநோய் வரும் என்பது சமீப காலத்தில் பரவி வரும் நம்பிக்கை. ஆனால் இது உண்மையா? என்பது குறித்து பலரும் குழப்பத்தில் உள்ளனர். 1995-ல் வெளியான ‘Dressed to Kill’ என்ற புத்தகத்தில் சிட்னி ராஸ் சிங்கர் மற்றும் சோமா கிரிஸ்மைஜர் ஆகியோர் கூறுகையில், “Underwire bra அணிவதால் மார்பகத்தின் கீழ் இருக்கும் நிணநீர் ஓட்டம் தடைபடுகிறது. இதனால் புற்றுநோய் உருவாகும்” என்று கூறியிருந்தன. ஆனால், இது அவர்களின் தனிப்பட்ட ஊகமே. ஆனால், பிரா அணிவதால் புற்றுநோய் உண்டாகும் என்பதற்கான ஆய்வுகள் எதுவும் இல்லை.
இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு, பிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் இந்தக் கருத்தை சோதிக்க ஒரு பெரிய அளவிலான ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 1500-க்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவில், பிரா அணிவதால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறுவதற்கு எந்தவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது.
அதே நேரத்தில், நீண்ட நேரம் மிக இறுக்கமான பிரா அணிவது, உடலில் ரத்த ஓட்டத்தை பாதிக்கலாம் என்றும் சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடலை முற்றிலும் அழுத்தும் வகையில் உள்ள உடைகள், மூச்சுப் போக்கை குறைத்து, நாள்பட்ட காலங்களில் தொந்தரவை உண்டாக்கக்கூடியதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பிரா அணிவது ஒரு விருப்பம்.. கட்டாயம் அல்ல. பெண்கள் தங்களது உடலையும், நலத்தையும் புரிந்து கொண்டு, சரியான தேர்வுகளை செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே போல, அமெரிக்க புற்றுநோய் சங்கமும், இதையே உறுதி செய்தது. பிரா அணிவது, அதிலும் underwire bra அணிவது, மார்பக புற்றுநோயை தூண்டும் என்ற எண்ணம், அறிவியல் ஆதாரம் இல்லாத ஒரு தவறான நம்பிக்கை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சில ஆய்வுகள் மற்றும் சமூக ஊடகங்கள் இதைப் பற்றிய தகவல்களை பகிர்ந்தாலும், இதுவரை இது பற்றிய தெளிவான மருத்துவச் சான்றுகள் இல்லை. அதே நேரத்தில், நீண்ட நேரம் மிக இறுக்கமான பிரா அணிவது, உடலில் ரத்த ஓட்டத்தை பாதிக்கலாம் என்றும், சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடலை முற்றிலும் அழுத்தும் வகையில் உள்ள உடைகள், மூச்சுப் போக்கை குறைத்து, நாளடைவில் தொந்தரவை உண்டாக்கக்கூடியதாக இருக்கலாம்.
பிரா அணிவது ஒருவரது விருப்பம் தான்.. கட்டாயம் அல்ல. எனவே, பெண்கள் தங்களது உடலையும், நலத்தையும் புரிந்து கொண்டு, சரியான தேர்வுகளை செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.