தனது கணவரை விட ஐந்து மடங்கு அதிகமாக சம்பாதிக்கும் பெண் ஒருவர், விவாகரத்துக்குப் பிறகு கணவருக்கு ஜீவனாம்சம் (Alimony) செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்து சமூக ஊடகங்களில் எழுப்பிய கேள்வி கவனத்தை ஈர்த்துள்ளது.
35 வயது பெண் ஒருவர், ரெடிட்டில் (Reddit) வெளியிட்ட பதிவில், தாம் ஐடி துறையில் சுமார் 75 லட்சம் ரூபாய் ஆண்டு CTC உடன் பணிபுரிவதாகவும், தனது கணவர் அரசு ஊழியராக மாதம் சுமார் 1.2 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் திருமணம் 5 ஆண்டுகளாக நீடித்துவருகிறது. ஆனால் உறவில் ஏற்பட்ட சிக்கல்களால், தாம் விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும், “கணவர் எளிதில் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொள்வதில்லை. அவர் நிதி நன்மை கோருவார் என அஞ்சுகிறேன்” எனவும் பதிவில் தெரிவித்துள்ளார்.
அந்த பெண், தனது கணவர் தன்னை நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “அவர் தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி என்னை நிதி ரீதியாக சுரண்ட முயற்சிப்பார். அதனால், நான் தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது கேள்வி தொடர்பாக சமூக வலைதலங்களில் பலர் வித்தியாசமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர் “உங்கள் சம்பளம் அவரது வாழ்க்கை முறையையும் உயர்த்தியிருந்தால், அவர் கோரலாம். ஆனால் நீங்கள் வீட்டை விட்டு விலகிவிட்டதால், உங்கள் வருமானத்தை சார்ந்து அவர் இல்லை என நிரூபிக்கலாம். அப்படியானால் ஜீவனாம்சம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
ஒரு பயனர் “உங்கள் சம்பளம் அவரது வாழ்க்கை முறையையும் உயர்த்தியிருந்தால், அவர் கோரலாம். ஆனால் நீங்கள் வீட்டை விட்டு விலகிவிட்டதால், உங்கள் வருமானத்தில் அவர் சார்ந்து இல்லை என நிரூபிக்கலாம். அப்படியானால் ஜீவனாம்சம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.” என்றார். மற்றொரு பயனர், “கணவனை விட மனைவி 5 மடங்கு சம்பாதிக்கும் நிலை அரிதானது. சட்டப்படி நீங்கள் 20% – 33% வரை ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கும் வாய்ப்பு உண்டு.” என்றார்.
மூன்றாவது பயனர், “அவர் அரசு ஊழியர் என்பதால், தன்னைத்தானே பராமரிக்கக் கூடியவர். எனவே, ஜீவனாம்சம் கூட கருதப்படாமல் போகலாம்.” என்றார். நான்காவது பயனர், “வேறொரு மாநிலத்தில் விவாகரத்து கோருவது சாத்தியமில்லை. வழக்கு உங்கள் குடியிருப்பு மற்றும் திருமண இடத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.” என்றார். ஐந்தாவது பயனர், “அவரது சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் அவருக்கே போதுமானது. நீதிமன்றங்கள் பொதுவாக இத்தகையவர்களுக்கு பராமரிப்பு வழங்குவதில்லை. எனவே, சலுகைக்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்.” என்றார்.
Read more: பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்..? சற்று நேரத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..