கிரேக்க நாகரிகத்தை உலகுக்குக் காட்டும் நகரமான ஐரோப்பிய நாடான மாசிடோனியா பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
கிரேக்க மாமன்னர் அலெக்ஸாண்டர் ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்த நகரம் மாசிடோனியா. அன்னை தெரசா பிறந்த நகரமான மாசிடோனியாவில், பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளன. தென் கிழக்கு ஐரோப்பாவில், இன்று வடக்கு மாசிடோனியா குடியரசு தனிநாடாக உள்ளது. கிரீஸ், அல்பானியா, பல்கேரியா, செர்பியா என பல நாடுகளால் சூழப்பட்ட வடக்கு மாசிடோனியா குடியரசு ஸ்கோப்யா என்னும் நகரை தலைநகரமாகக் கொண்டுள்ளது.
நிலப்பரப்பில், நமது தமிழகம் அளவே இருக்கும் மாசிடோனியாவில் வெறும் 20 லட்சம்பேர் மட்டுமே வசிக்கின்றனர். இந்த சிறு நாட்டில் மாசிடோனிய வம்சாவளியினர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். 6 ஆம் நூற்றாண்டு துவங்கி அலெக்ஸாண்டரின் படை, ரோமானியப் படை, பிரசன்டைன் படை, ஒட்டாமன் படை, யுகோஸ்லாவியா படை என பல படைகள் இப்பகுதியை ஆண்டுள்ளன. இறுதியாக 1991 ஆம் ஆண்டு வடக்கு மாசிடோனியா குடியரசு உருவாகி, தனி நாட்டுக்கான சுதந்திரம் பெறப்பட்டது.
மாசிடோனியாவில் ஏசு கிறிஸ்து சிலுவையில் இடப்பட்டதாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்நாட்டில் தற்போது ஆயிரம் தேவாலயங்கள் உள்ளன. இன்றும் உலகம் முழுக்க உள்ள கிறிஸ்தவர்கள் வாடிகன், பெத்லஹேம், ஜெருசலேமை அடுத்து அதிகமாக மாசிடோனியாவுக்கு வருகை தந்து புனித வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். ஐரோப்பிய கண்டத்தின் மிக ஆழமான (288 மீட்டர் ஆழம்) மற்றும் புராதன ஏரி ஓஹ்ரிட் ஏரி. இந்த ஏரி 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மாசிடோனியாவின் வெவ்கானி பகுதியில் உள்ள குடிமகன்கள் பலர் ‘குடி’ மகன்களாக உள்ளனர். அதாவது இவர்கள் தீவிர மதுப் பிரியர்கள் ஆவர். எப்போதும் உள்ளூர் வைன் குடித்தபடி இருக்கும் இவர்கள், தங்களது வெவ்கானி பகுதிக்கு தனிக் கொடி, தனி பணமதிப்பு, தனி குடியுரிமை வேண்டுமென மாசிடோனியா அரசிடம் போராடினர். அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் இன்றும் இப்பகுதிக்கு வரும் உலக சுற்றுலாப் பயணிகளுக்கு வைன் ஊற்றிக் கொடுக்கும் இவர்கள், அதிக வைன் குடிப்பவர்களுக்கு வெவ்கானி குடியரசின் குடியுரிமையை தாங்களே வழங்குவோம் என்று கூறிவருகின்றனர்.