பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ஆமிர் கான்.. இவர் தனது சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற நடிகராக வலம் வருகிறார். அவரின் திரை வாழ்க்கை மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் ஆமிர் கானின் தம்பி வைத்த பகீர் குற்றச்சாட்டு தான்.. ஆமிர் கான் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜெசிகா ஹைன்ஸுடன் திருமணத்தை மீறிய கள்ள உறவை கொண்டிருந்ததாகவும், திருமணத்திற்குப் புறம்பான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் அவரின் தம்பி ஃபைசல் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
ரீனா தத்தாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, ஆமிர் கான், ஜெசிகா ஹைன்ஸுடன் உறவு வைத்திருந்ததாக ஃபைசல் கான் குற்றம் சாட்டினார். இந்த காலகட்டத்தில், ஆமிர் திரைப்படத் தயாரிப்பாளர் கிரண் ராவுடன் வசித்து வந்ததாகவும் அவர் மேலும் கூறினார். இது தற்போது விவாதப் பொருளாக மாறி உள்ளது..
ஆனால் இந்த சர்ச்சை இப்போது தொடங்கியதில்லை.. 2000களின் தொடக்கத்தில் அதிகம் பேசப்பட்ட சர்ச்சைகளில் ஒன்று ஜெசிகா ஹைன்ஸ் தொடர்பானது. ஆமிர் மற்றும் ஜெசிகா ஆகியோர் அவரது ‘குலாம்’ படத்தின் படப்பிடிப்பின் போது நேரடி உறவில் இருந்ததாக அப்போது பரவலாக கூறப்பட்டது.. ஆமிர் கானுடன் உறவில் இருந்த ஜெசிகா ஹைன்ஸ் கர்ப்பமானதாகவும், தனது கர்ப்பத்தை கலைக்க மறுத்த பிறகு ஜான் என்ற மகனைப் பெற்றெடுத்தார் என்றும் கூறப்படுகிறது..
யார் ஜெசிகா ஹைன்ஸ்?
ஜெசிகா ஹைன்ஸ் ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவார்.. பொழுதுபோக்கு செய்தித் தொகுப்பில் தனது பணிக்காக மிகவும் பிரபலமான எழுத்தாளராக அவர் வலம் வந்தார்.. அவர் அமிதாப் பச்சனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட லுக்கிங் ஃபார் தி பிக் பி என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.. இந்தியாவில் பணிபுரியும் போது ஹைன்ஸ் ஆமிர் கானை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்ததாக தகவல்கள் பரவியது.. இருப்பினும், ஆமிர் கானோ அல்லது ஜெசிகாவோ இந்த கூற்றுக்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஜெசிகா 2007 இல் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் வில்லியம் டால்போட்டை மணந்தார். தனது மகனை வளர்ப்பதில் வில்லியம் ஆதரவான நபராக இருந்ததாக ஜெசிகா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.. தனது புத்தகம் எழுதுவதற்காக இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருந்தபோது, தனது கணவர் ஜானை கவனித்துக்கொண்டார் என்றும், அவருக்கு நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்தார் என்பதை ஜெசிகா நினைவு கூர்ந்தார்.
ஆன்லைனில் மீண்டும் பரவும் வதந்திகள்
ஜெசிகாவின் மகனின் புகைப்படங்கள் ரெடிட் தளத்தில் வெளியான நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சை மீண்டும் எழுந்தது. சமூக ஊடக பயனர்கள் அமீர் கானுக்கும் ஜெசிகாவின் மகனுக்கு உள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டு வருகின்றனர்.. இதுஇது பழைய விவாதங்களை மீண்டும் தூண்டியது. இருப்பினும், இந்த தகவல்கள் எந்தளவு உண்மை என்ன என்பது தெரியவில்லை..ஆமிர் கானும் இந்த விஷயத்தில் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனாலும் ஆமிர் கான் மற்றும் ஜெசிகா ஹைன்ஸின் கதை தொடர்ந்து பொதுமக்களின் ஆர்வத்தை ஈர்த்து வருகிறது. இது பாலிவுட்டின் மிகவும் நீடித்த வதந்திகளில் ஒன்றாக உள்ளது.