சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ரஞ்சித் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் மைதானத்தில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட அஜித் என்பவர், அங்கு வந்து ரஞ்சித்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அஜித்தை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, படுகாயமடைந்த ரஞ்சித்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும், பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அஜித், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, அஜித் சிறுவனாக இருந்தபோது அவரின் உறவுக்கார பெண்ணுக்கும், ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் உல்லாசமாக இருந்ததை அஜித் நேரில் பார்த்துள்ளார். இதனால், அஜித்தை ரஞ்சித் குமார் வீட்டில் இருந்து விரட்டியதாக தெரிகிறது.
காலங்கள் கடந்தாலும் ரஞ்சித் மீதான கோபம் அஜித்துக்கு அப்படியே இருந்துள்ளது. மேலும் அஜித் திருட்டு, அடிதடி உள்ளிட்ட சம்பங்களிலும் ஈடுபட்டு, அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தான், ஆத்திரத்தில் ரஞ்சித்தை அஜித்குமார் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அஜித்தை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : மழைக்காலத்தில் இதை கவனிக்கா விட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்..!! இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமா இருங்க..!!